காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பெரியகாஞ்சிபுரம் சாலையில் சீருடையில் இருந்த பெண் காவலரை அரிவாளால் வெட்டினர். பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த காவலர் டில்லிராணியின் வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணி புரியும் டில்லிராணியை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். படுகாயம் அடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு
136