Friday, May 17, 2024
Home » 90 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு அறிவிப்பு

90 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு அறிவிப்பு

by Porselvi

1. Deputy Collector: 16 இடங்கள்.
2. Deputy Superintendent of Police: 23 இடங்கள்.
3. Assistant Commissioner (Commercial Tax): 14 இடங்கள்
4. Deputy Registrar (Co-operative Societies): 21 இடங்கள்
5. Assistant Director (Rural Development): 14 இடங்கள்
6. District Officer: ( Fire & Rescue Service): 1 இடம்.
வயது: 01.07.2024 தேதியின்படி 21 முதல் 34க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம் பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 5 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும். தேவையான கல்வித்தகுதியுடன் பிஎல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு ஒரு வருடம் கூடுதல் வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். டிஎஸ்பி/ பயர் சர்வீஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்தது 165 செ.மீ., உயரமும், பெண்கள் 155 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பளவு சாதாரண நிலையில் 86 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 91 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.முதல்நிலை தேர்வு (Preliminary Examination), பிரதான தேர்வு (Main Examination), தமிழ் மொழி திறனறியும் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: முதல் நிலை தேர்வுக்கு ரூ.100/-. பிரதான தேர்வுக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.04.2024.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi