தேனி: தேனி மாவட்டம், குள்ளப்புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளித்த போது, இரண்டாம் ஆண்டு மாணவர் அருண் பல்தேவ் (19) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீச்சல் தெரிந்த தன் மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக மாணவனின் தந்தை பெரம்பலூரைச் சேர்ந்த சந்திரசேகரன் புகார் அளித்துள்ளார் இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.