‘டிராவலிங்’. இது வேற உலகம். இதற்கு வயது வித்தியாசம் இல்லாமல் அடிமையானவர்கள் உள்ளனர். அழகான சாலைகள், ரம்மியமான காட்சிகள், சூழ்நிலைக்கேற்ப பாட்டு, பிடித்தவர்களுடன் ஒரு லாங் டிரைவ்… என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதற்கு நடிகர்களும் விதி விலக்கல்ல. நடிகர் அஜித் ரைடிங் செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். காரும், பைக்கும் அவருக்கு அத்துப்படி. தற்போது, ‘உலக டூர்’ சென்று வருகிறார்.
அவ்வப்போது இடைவெளி எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். சமீபத்தில் தனது மனைவி ஷாலினியுடன் காரில் சென்று கொண்டிருக்கிறார். அஜித் காரை ஓட்டுகிறார். அப்போது, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ‘உயிரும் நீயே உலகமும் நீயே…’ என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை வீடியோவாக எடுத்து, ‘டிராவலிங்போது அஜித்குமார் விரும்பும் பாடல்’ என்று ஷாலினி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாட்டை ரசித்தப்படி செல்லும் அஜித் சற்று எமோஷ்னலாக காணப்படுகிறார். இந்த பாட்டு அஜித் நடித்து 1994ம் ஆண்டு வெளியான ‘பவித்ரா’ படத்தில் இடம்பெற்ற பாட்டு ஆகும். இதை உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். தற்போது அந்த வீடியோவாவும் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல், வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் காரை ஓட்டி கொண்டிருக்கும் போது நடிகர் விஜய்யின் லியோ படத்தில் இடம்பெறுள்ள ‘நா ரெடி’ பாட்டை கேட்டபடி வைப் செய்து கொண்டு செல்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.