டெல்லி : மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டெஸ்லா 14,000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். அண்மைக் காலமாக மின்சார கார்களின் விற்பனை குறைந்து கொண்டே செல்வதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.