Sunday, September 1, 2024
Home » கட்காவில் கலக்கிய தமிழ்நாடு

கட்காவில் கலக்கிய தமிழ்நாடு

by Dhanush Kumar

மதுரை: கேலோ இந்தியா கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியின் யு-18 ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு -, ராஜஸ்தான் மோதின. இதில் அபாரமாக செயல்பட்ட தமிழ்நாடு அணி 108-79 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தியது. வர்ஷன் அதிகபட்சமாக 51 புள்ளிகள் குவித்தார். மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 166-110 என்ற புள்ளிக்கணக்கில் இமாச்சலபிரதேச அணியை வென்றது.

மகாராஷ்டிரா 146-67 என கர்நாடகாவையும், ஜார்க்கண்ட் 129-127 என்ற புள்ளிக்கணக்கில் அரியானாவையும் வீழ்த்தின. மற்ற ஆட்டங்களில் சண்டிகர் 174-111 என மத்தியப்பிரதேசத்தையும், குஜராத் அணி 127-116 என அசாம் அணியையும் வென்றன. தொடக்க விழாவில் மதுரை கலெக்டர் சங்கீதா, எம்பி சு.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், இந்திய விளையாட்டு ஆணைய நிர்வாகிகள் சுமித், பல்ஜேந்தர்சிங் பங்கேற்றனர். மதுரையில் கட்கா போட்டிகள் நாளை வரை நடைபெறுகின்றன. கோ-கோ போட்டிகள் 26ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறும்.

You may also like

Leave a Comment

twenty − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi