சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்த வலி நிவாரணி மாத்திரைகளை விற்று வந்த இளைஞர் ஆதில் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆதில் பாஷாவிம் இருந்து 2,015 வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.