சென்னை: தைவானில் உள்ள பாக்ஸ்கான் தலைமை நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது என தமிழக தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவில்லை என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் நேற்று தைவானில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தொழில்துறை தெரிவித்துள்ளது.