டெல்லி: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆக.8-ல் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் விவாதம் நடைபெறும். 3 நாட்கள் விவாதத்துக்கு பிறகு பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ம் தேதி பதில் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.