பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க அணியுடன் நேற்று மோதிய ஸ்வீடன் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. தென் ஆப்ரிக்காவின் ஹில்டா மகையா 48வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். ஸ்வீடன் தரப்பில் ரோல்போ 65வது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டத்து. ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்வீடன் வீராங்கனை இலெஸ்டெட் 90வது நிமிடத்தில் கோல் போட்டு வெற்றியை வசப்படுத்தினார். வெலிங்டனில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.