பணி: Law Clerk cum Research Associate- 90 இடங்கள்.
சம்பளம்: v80,000. வயது: 15.2.2024 தேதியின்படி 20 முதல் 32க்குள்.
தகுதி: சட்டப் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து இந்திய பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். 5 வருட ஒருங்கிணைப்பு பட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 தாள்களை கொண்டது. தாள்-1ல் கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். தாள்-2ல் விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, நாக்பூர், பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: ரூ.500 செலுத்த வேண்டும். இதை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 15.02.2024.