மங்களூரு: மங்களூருவில், மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர் பேசும் போது, மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும், அச்சம் இல்லாத சூழலின் அவசியத்தை வலியுறுத்தினார். தேவைப்பட்டால் மாரல் போலீசிங் சம்பவங்களை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்படும். இது மங்களூரு மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.