Thursday, May 16, 2024
Home » சில்லி பாய்ன்ட்…

சில்லி பாய்ன்ட்…

by Karthik Yash

* சென்னை செயின்ட் பீட்ஸ் விளையாட்டு அறக்கட்டளை (சிஎஸ்எஸ்எப்) சார்பில் மே1 முதல் ஒரு மாத காலம் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 6 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மேலும் தகவலறிய 98400 70486 அல்லது 98412 27966.
* செங்கல்பட்டு ஜிஎல்எல் விளையாட்டு கிளப் சார்பில் நடைபெற்ற 3வது பெண்கள் கபடி போட்டியில், சென்னையை சேர்ந்த செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகளம், குத்துச்சண்டை, நீச்சல் என அனைத்து விளையாட்டுகளுக்குமான கோடைக்கால பயிற்சி முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கின்றன. இது குறித்து விவரங்கள், தொடர்பு எண்களை அறிய: www.sdat.tn.gov.in மேலும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளவும். சென்னை: 7401703469.
* பாரிஸ் ஒலிம்பிக் படகு போட்டியில் பங்கேற்க இந்தியாவின் நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், பிரான்சில் பெற்றோருடன் தங்கியிருந்த நேத்ரா நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். இங்கு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ள நேத்ராவை தமிழ்நாடு படகு போட்டி சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi