சேலம் : சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய
மறுக்கும் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கண்டனம் எழுந்துள்ளது. யாரும் செய்யாத முறைகேடுகளை பதிவாளர் செய்ததாக உயர்கல்வித்துறை செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது என்றும் எனவே உடனடியாக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பல்கலை. ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.