சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் மேற்கு பிரதான சாலையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். மேட்டூர் மேற்கு பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.