Friday, May 10, 2024
Home » தமிழ்நாடு குடிமைப்பணி விதிகள் பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்

தமிழ்நாடு குடிமைப்பணி விதிகள் பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்

by Suresh

சென்னை: தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17A, 17B பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “01.01.2023 நிலவரப்படியான அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, கீழ்க்காண் விவரங்கள் கோரப்படுகிறது.

முதுகலை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்:
1. 2003 – 2004 ஆண்டு வரை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டு 1.06.2006 முதல் பணிவரன் முறை செய்யப்பட்ட மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) ஆகியேரின் விவரங்களை அவர்களது மதிப்பெண் /வருடத்துடன் சரிபார்த்து அனுப்ப வேண்டும். (உச்சநீதிமன்ற தீர்ப்பாணையின் படி போட்டி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தர எண் நிர்ணயித்து முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 2003-2004ஆம் ஆண்டுக்கான தெரிவுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெற்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் பின்பற்றிடல் வேண்டும்.)

2. கருணை அடிப்படை மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரம்.

3. முந்தைய ஆண்டுகளில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெறாமல், 01.01.2023 அன்றைய நிலவரப்படி தயார் செய்யப்படும் தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள்

4. ஏற்கனவே, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு. 2019-இல் தற்காலிக உரிமை விடல் செய்து முழு மூன்று தேர்ந்தோர் பட்டியல் ஆண்டுகள் (3 panel years) நிறைவு செய்துள்ள முதுகலை ஆசிரியர்கள் . அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சார்பான விவரங்கள்
1. 2015-2016ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை தவிர மீதமுள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விவரங்கள். 2. ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு. 1.1.2019 நிலவரப்படி தற்காலிக உரிமை விடல் செய்து முழு மூன்று ஆண்டு தேர்ந்தோர் பட்டியல் ஆண்டுகள் ( 3 panel years) நிறைவு பெற்றுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்கள்.

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 07.2023-க்குள் டபிள்யு-1 பிரிவு மின்னஞ்சலில் (w1dsetn@gmail.com) அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு Tamil nadu Government Gazette Part Ill section 1(b) date 30.01.2020 ல் அரசாணை நிலை எண். 14 பள்ளிக்கல்வி (பக2(1)) நகள். 30.01.2020 ல் தெரிவித்துள்ளவாறு கீழ்க்கண்ட துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
1. Tamil Nadu Government Office Manual Test
2. Account test for Executive Officers Or
Account test for Subordinate officers part I
3.Tamil Nadu School Education Department Administrative test Paper -1 and paper-II

தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(b)ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.

தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(a) ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடையாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.

மேலே குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மற்றும் தண்டனை பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்கப்படும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

14 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi