சேலம்: சேலம் மத்திய சிறையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருட்டு வழக்கு கைதி, கடந்த மாதம் அடைக்கப்பட்டார். அவரை பார்க்க அவரது மனைவி, சேலம் சிறைக்கு வந்துச் சென்றுள்ளார். அப்போது, தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த வார்டன் விஜயகாந்த் (27), அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்து செல்போன் எண்ணை பெற்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் காலில் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் விசாரணை நடத்தினார். அதில், அப்பெண்ணுக்கு வார்டன் விஜயகாந்த், பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து சிறை வார்டன் விஜயகாந்தை, நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டார்.