டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மக்களவையில் பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.