புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டமான அம்ரித் உத்யான் திருவிழாவின் முதல் பகுதியாக கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டிருந்தது. இதில்,10 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். கடந்த 14ம் தேதி 2ம் கட்ட பூங்கா திருவிழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த திருவிழா ஆகஸ்ட் 16( நேற்று) முதல் வரும் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்றும் இதில் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கான நுழைவு சீட்டு பூங்காவின் அருகிலேயே கிடைக்கும் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்று தெரிவிககப்பட்டுள்ளது.