சென்னை: சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூருக்கு புறப்படுகிறார். காலை 10.30 மணியளவில் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வேலூரை தொடர்ந்து கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கோவை, நீலகிரி, பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொள்கிறார்.