பெஷாவர்: பாகிஸ்தானில் ஜாமியத் உலமா கட்சியின் மாநாட்டில் நடந்த தற்கொலை படை தாக்குலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நேற்று 54ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாஜவுர் பழங்குடியின மாவட்டத்தில் உள்ள கார் பகுதியில் நேற்று முன்தினம் ஜாமியத் உலமா இஸ்லாம் பஸல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் சம்பவ இடத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கையானது 54 ஆக அதிகரித்துள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இந்த தாக்குலின் பின்னணியில் செயல்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.