Saturday, July 27, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் பேர் உள்ளனர். நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதி முடிவடைகிறது. 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்காக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். கடந்த டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மொத்தம் 9,13,035 பேர் விண்ணப்பம் அளித்ததாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்த வாக்குச்சாவடி அலுவலர்கள், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கினர். ஒரே நபரின் பெயர் 2 இடங்களில் இருப்பதை கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு அவரது விருப்பத்தை கேட்டு அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரானது.

இதையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று காலை 11 மணிக்கு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்றைய நாளில் இறுதியாக 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,14,85,724 உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர் உள்ளனர். 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,30,522; பெண்கள் 3,29,783; மூன்றாம் பாலினத்தவர் 114). அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,62,612 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,29,950; பெண்கள் 2,32,538; மூன்றாம் பாலினத்தவர் 124). தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,72,140 பேர் (ஆண்கள் 84,702; பெண்கள் 87,435; மூன்றாம் பாலினத்தவர் 3).

இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சென்னை, துறைமுகம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,624 (ஆண்கள் 89,569; பெண்கள் 82,996; மூன்றாம் பாலினத்தவர் 59). வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13,88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13,61,888 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6,17,623; பெண்கள் 7,43,803; மூன்றாம் பாலினத்தவர் 462) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 6,43,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 6,02,737 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (3,71,537), இறப்பு (1,33,477) மற்றும் இரட்டை பதிவு (97,723) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 3,23,997 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,64,487; பெண்கள் 1,59,343; மூன்றாம் பாலினத்தவர் 167) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு கூறினார்.

* தொடர்ந்து பெயர் சேர்க்கலாம்
வாக்காளர் பட்டியலில் 4,32,805 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18-19 வயதுள்ள 5,26,205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 2,74,035; பெண்கள் 2,52,096; மூன்றாம் பாலினத்தவர் 74). வாக்காளர் பட்டியலினை, தலைமை தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

அதன்படி 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக www.voters.eci.gov.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-ல் விண்ணப்பிக்கலாம். நேற்று வரை தமிழகத்தில் 4.29 கோடி (69.38%) ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

மொத்த வாக்காளர்கள் 6,18,90,348
* ஆண் வாக்காளர்கள் 3,03,96,330
* பெண் வாக்காளர்கள் 3,14,85,724
* மூன்றாம் பாலினத்தவர் 8,294

* வெளிநாடுவாழ் வாக்காளர் 3,480 இறுதி பட்டியலின்படி

* அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி: செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் (6,60,419)
* குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (1,72,140)

* மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம்
மாவட்டம் வயது 80
வயதுக்கு மேல் மொத்தம்
18-19 20-29 30-39 40-49 50-59 60-69 70-79
சென்னை 37442 535710 828850 923897 708595 464401 267678 134594 3901167
திருவள்ளூர் 44547 564362 743042 808291 603102 370418 186430 63518 3383710
காஞ்சிபுரம் 19063 223475 296203 322981 224137 141752 75517 30419 1333547
வேலூர் 20604 231481 269233 282880 221582 142419 73997 28408 1270604
கிருஷ்ணகிரி 25576 315809 372445 358569 261030 163290 81237 31957 1609913
தர்மபுரி 23795 256336 256133 266743 212589 135606 66855 24768 1242825
திருவண்ணாமலை 40609 388361 435484 458463 343833 228760 131676 53614 2080800
விழுப்புரம் 30059 314700 357863 367713 277264 180576 102139 39263 1669577
சேலம் 53391 554763 588815 626796 521038 339720 179721 63878 2928122
நாமக்கல் 23219 245253 267611 299700 264901 185469 106730 39424 1432307
ஈரோடு 25280 309764 354533 418571 374790 266156 148742 56875 1954711
நீலகிரி 6991 95013 112050 127757 115164 74366 33514 8769 573624
கோவை 37940 469107 640013 697025 576655 380040 204243 76571 3081594
திண்டுக்கல் 27836 332137 363354 409187 351864 217944 120545 43509 1866376
கரூர் 17294 161531 168635 183614 163486 107332 59018 18223 879133
திருச்சி 34455 401842 465502 490594 410579 278166 153085 57667 2291890
பெரம்பலூர் 13029 115880 114259 116751 99848 64382 35676 11923 571748
கடலூர் 36789 408224 432630 462556 378779 237707 121228 45363 2123276
நாகப்பட்டினம் 9176 103304 112193 118622 98085 63157 33598 11308 549443
திருவாரூர் 14310 188961 214240 221776 190598 125618 65268 20636 1041407
தஞ்சாவூர் 27977 353129 411360 430212 372272 249107 133658 51756 2029471
புதுக்கோட்டை 21142 249577 273993 294705 236983 146205 83990 30001 1336596
சிவகங்கை 14133 202845 236751 260111 210100 137659 83116 35182 1179897
மதுரை 35519 463147 581320 600785 471011 305782 162502 57154 2677220
தேனி 13904 194338 223621 247226 208459 130292 68916 25743 1112499
விருதுநகர் 23709 292522 319291 344277 283113 175630 88964 27680 1555186
ராமநாதபுரம் 17628 210601 243481 264055 214087 129928 66835 22369 1168984
தூத்துக்குடி 25194 268237 296241 314252 255658 163973 91582 33022 1448159
திருநெல்வேலி 17318 235544 277300 296628 240202 166523 102023 47280 1382818
கன்னியாகுமரி 21625 260183 315260 342285 275676 191325 104963 36061 1547378
அரியலூர் 9449 103012 103401 102785 93335 59907 32093 12051 516033
திருப்பூர் 26408 356413 444984 535944 458075 291256 162875 68855 2344810
கள்ளக்குறிச்சி 24741 239265 241470 238763 177523 110935 57406 18672 1108775
தென்காசி 19954 244540 271394 291122 233477 149925 81472 29795 1321679
செங்கல்பட்டு 29445 409077 623799 639405 439306 285355 154402 58391 2639180
திருப்பத்தூர் 18434 196087 210202 206447 155836 98186 47540 15587 948319
ராணிப்பேட்டை 18638 192229 223591 229121 180021 113122 58585 21558 1036865
மயிலாடுதுறை 11690 139311 156942 165957 131586 87703 43091 14425 750705
மொத்தம் 9,18,313 1,08,26,070 1,28,47,489 1,37,66,566 1,10,34,639 71,60,092 38,70,910 12,51,931 6,18,90,348

You may also like

Leave a Comment

14 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi