Tuesday, February 27, 2024
Home » சென்னையில் நாளை முதல் பிப். 5ம் தேதி வரை நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் பிப். 5ம் தேதி வரை நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: சென்னையில் நாளை முதல் வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 21ம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் பேசும்போது முதல்வர் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பு கீழ்க்கண்ட அட்டவணைப்படி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

அதன்படி வரும் 24ம் தேதி மாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், 27ம் தேதி காலை 9 மணிக்கு பொள்ளாச்சி, கோவை, மாலை 3 மணிக்கு நீலகிரி, திருப்பூர், 28ம் தேதி காலை 9 மணியளவில் நாமக்கல், ஈரோடு, மாலை 3 மணிக்கு சேலம், தருமபுரி, 29ம் தேதி காலை 9 மணிக்கு சிவகங்கை, விருதுநகர், மாலை 3 மணிக்கு தென்காசி, நெல்லை, 30ம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாலை 3 மணிக்கு மதுரை, தேனி, 31ம் தேதி காலை 9 மணிக்கு ராமநாதபுரம், கடலூர், நாடாளுமன்ற தொகுதிக்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது.

மேலும் பிப்ரவரி 1ம் தேதி காலை 9 மணிக்கு சிதம்பரம், மயிலாடுதுறை, மாலை 3 மணிக்கு நாகப்பட்டினம், தஞ்சாவூர், 2ம் தேதி காலை 9 மணிக்கு வேலூர், அரக்கோணம், மாலை 3 மணிக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 3ம் தேதி காலை 10 மணிக்கு வடசென்னை, தென்சென்னை, மாலை 3 மணிக்கு மத்திய சென்னை, பெரும்புதூர், 4ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, மாலை 3 மணிக்கு பெரம்பலூர், திருச்சி, 5ம் தேதி காலை 9 மணிக்கு கரூர், திண்டுக்கல், மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம், புதுச்சேரி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. அந்ந நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே அரங்கத்திற்குள் வந்து அமர்ந்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi