திண்டுக்கல்: பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து தாடாகுளம் கால்வாய் மூலம் புன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நவ.9 – 2024 மார்ச் 17 வரை நாள் ஒன்றுக்கு 20 கனஅடி வீதம் 224.64 மி.கனஅடிக்கு மிகாமல் 130 நாள் நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு மூலம் தாடாகுளம் முதல் போக பாசன பரப்பான 844 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.