நறுக்கிய வாழைப்பூ,
உருளைக்கிழங்கு,
துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம்,
இஞ்சி-பூண்டு விழுது,
சோம்பு – சிறிதளவு,
மிளகாய் தூள்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நறுக்கிய வாழைப்பூ, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு ஆகிய மூன்றையும் தனித்தனியே வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு தாளித்து, அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கியவுடன், துவரம் பருப்பை நீருடன் சேர்க்கவும். உருளைக்கிழங்கை மசித்து அதில் கொட்டி, நீர் வடித்த வாழைப்பூவைச் சேர்த்துக் கிளறவும். இது சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள சூப்பர் காம்பினேஷன். உடலுக்கும் சத்து தரும்.