Thursday, May 9, 2024
Home » இந்திய ராணுவத்தில் நர்ஸ் மற்றும் பார்மசிஸ்ட்

இந்திய ராணுவத்தில் நர்ஸ் மற்றும் பார்மசிஸ்ட்

by Porselvi
Published: Last Updated on

 

பணி விவரம் :

1. Soldier Technical Nursing Assistant: வயது: 17½ முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை இருக்க வேண்டும். தகுதி: கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Sepoy Pharma. வயது: 19 முதல் 25க்குள் இருக்க வேண்டும். உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் D.Pharm அல்லது 50% மதிப்பெண்களுடன் B.Pharm முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேரடி ஆட்சேர்ப்பின் போது விண்ணப்பதாரர் பெற்றிருக்கும் உடல்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். என்சிசி பயிற்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2024.

You may also like

Leave a Comment

twelve − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi