Saturday, May 18, 2024
Home » என்.ஐ.டி நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு.. இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் நெகிழ்ச்சி!!

என்.ஐ.டி நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு.. இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் நெகிழ்ச்சி!!

by Porselvi

மதுரை: என்.ஐ.டி நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இந்த தேர்வுகளில் இந்தி கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டிருந்தது. இதில், இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்ததும் 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் தரப்பட்டு இருந்ததும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இத்தகைய அநீதி இந்தி அல்லா மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது, இந்தித் திணிப்பை கைவிட வேண்டுமென்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடந்த 23ம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். தற்போது கடிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. அதாவது தேர்வு பற்றிய புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தி கட்டாயம் அல்ல ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். மொழிப் பன்மைத்துவத்தை பாதுகாப்பதிலும், இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவதிலும் எப்போதும் முன்னிற்போம்” என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

eighteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi