Saturday, July 27, 2024
Home » புதிய வாகன பதிவு 15% உயர்வு

புதிய வாகன பதிவு 15% உயர்வு

by Lavanya

வாகன உற்பத்தியாளர்களை போலவே, ஆட்டோமொபைல் டீலர்கள் தரப்பில் இருந்தும் வாகன பதிவு புள்ளி விவரங்கள், சாலை போக்குரவத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாகன் இணையதள தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இவை டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கையாகும். இதன்படி, கடந்த மாதத்தில் நாடு முழுவதும் மொத்ததம் 2,127,653 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 1,849,691 ஆக இருந்தது. இது 15 சதவீத உயர்வாகும். இதுபோல் கடந்த மாதத்தில் டூவீலர்கள் விற்பனை 15 சதவீதம் உயர்ந்து 1,458,849 ஆக உள்ளது. இதுபோல் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 1,458,849 ஆக உள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது. டூவீலர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் விற்பனை ஏறுமுகமாக உள்ளது என வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

5 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi