மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவுடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 0.5% சரிவுடன் முடிந்தன. தனியார் வங்கி பங்குகள், வாகனத் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் விலை குறைந்ததால் சரிவு. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 366 புள்ளிகள் சரிந்து 65,323 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களில் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 19,428 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.