திண்டுக்கல் : திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.