
சென்னை: பட்டியலின மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர் எல்.இளையபெருமாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இளையபெருமாள் முயற்சியால்தான் சிதம்பரத்தில் இரட்டைப் பானை முறையில் முடிவுக்கு வந்தது. மிக பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் எல்.இளையபெருமாள். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இளம்வயதில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூறினார்.