
பிஜி: பிஜி தீவில் இன்று காலை 10.01 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாகவும், வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்செதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்புக்கான ஆபத்து எதுவும் இல்லை. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருப்பினும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.