லேண்ட் ரோவர் நிறுவனம், டிஸ்கவரி ஸ்போர்ட் என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் டைனமிக் எஸ்இ பெட்ரோல் மற்றும் டைனமிக் எஸ்இ டீசல் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. 11.4 அங்குல வளைந்த தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதிலுள்ள 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 249 பிஎஸ் பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 2 லிட்டர் டீசல் இன்ஜின் 204 பிஎஸ் பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.67.9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.