கேடிஎம் நிறுவனம், 390 அட்வென்சர் எக்ஸ் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 373 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 42.9 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் இடம் பெற்றுள்ளது.
டூயல் சானல் ஏபிஎஸ், டிஎப்டி டிஸ்பிளேவுக்கு பதிலாக எல்சிடி டாஷ் போர்டு, மோட்டார் சைக்கிள் டிராக்ஷன் கன்ட்ரோல், மூன்று வித டிரைவிங் மோட்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக அறிமுகச் சலுகையுடன் சுமார் ரூ.2.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள 390 அட்வென்சரை விட இந்த பைக் சுமார் ரூ.59,000 குறைவாகும்.