Monday, May 20, 2024
Home » கிருஷ்ணசாமிக்கு ரூ.25 கோடி சொத்து

கிருஷ்ணசாமிக்கு ரூ.25 கோடி சொத்து

by Karthik Yash

தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, டாக்டர் கிருஷ்ணசாமியின் பெயரில் ரூ.18 லட்சத்து 12 ஆயிரத்து 783 மதிப்பில் அசையும் சொத்துக்களும், உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் கிராமத்தில் 6 ஏக்கர் விவசாய நிலம், 17.61 ஏக்கர் நிலங்கள், குனியாமுத்தூரில் மருத்துவமனை கட்டிடம் என மொத்தம் 12 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

அவரது மனைவி டாக்டர் சந்திரிகா கிருஷ்ணசாமி பெயரில் ரூ.47 லட்சத்து 4 ஆயிரத்து 957 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், குடிமங்கலம் கிராமத்தில் 5.19 ஏக்கர் நிலம், சென்னை வால்மீகி நகரில் வீடு, கோவை குனியாமுத்தூரில் வீடு, மருத்துவமனை உள்ளிட்ட ரூ.12 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கையில் ரொக்கமாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் ரூ.1.21 லட்சமும், அவரது மனைவி டாக்டர் சந்திரிகா கிருஷ்ணசாமியிடம் ரூ.ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 250ம் உள்ளது. மனைவிடம் 618 கிராம் தங்க நகைகள் ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 736 மதிப்பில் உள்ளன. மனைவி பெயரில் ரூ.3 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 259 வங்கி கடனும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எம்எல்ஏ பென்சன், கட்டிட வாடகை, வங்கி வட்டி மூலமும், அவரது மனைவிக்கு கட்டிட வாடகை, மருத்துவமனை வருமானம், வங்கி வட்டி மூலமும் வருமானம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

9 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi