காவா சாக்கி நிறுவனம் இசட் எக்ஸ் 4 ஆர் ஆர் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் 399 சிசி லிக்விட் கூல்டு இன் லைன் 4 சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 14,000 ஆர் பி எம் இல் 76 பிஎச்பி பவரையும் 12,000 ஆர் பி எம் இல் 37.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எல்இடி லைட்டுகள், ஸ்போர்ட், ரோடு, ரெயின், ரைடர் என 4 ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், 4.3 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. ஷோரூம் விலை சுமார் ரூ.8.49 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவாசாக்கி நிஞ்சா இசட் எக்ஸ்4 ஆர்ஆர்
previous post