டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 1604வி பிளாக் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இன்ஜினில் மாற்றமில்லை. ஆர்டிஆர் 160யில் 159 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 16.04 எச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 13.85 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆர்டிஆர் 160 4வி-யிலும் இதே இன்ஜின் தான் உள்ளது. ஆனால், 9,250 ஆர்பிஎம்-ல் 17.55 எச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 14.73 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த பைக்குகள் அலாய் வீல்கள், இன்ஜின் உட்பட முழுவதும் கருப்பு நிற தீமில் இந்த பைக் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக், பின்புறம் மோனோஷாக் அப்சர்வர்கள், டிரம் பிரேக், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக ஆர்டிஆர் 160 டார்க் எடிஷன் சுமார் ரூ.1.20 லட்சம் எனவும், ஆர்டிஆர் 1604 வி சுமார் ரூ.1.25 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.