திருமலை:குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் அமைச்சராக சத்யகுமார் யாதவ் நேற்று பொறுப்பேற்றார். பின்னர் கூறுகையில், ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசில் அனைத்து துறைகளிலும் முறைகேடு செய்து சீரழிய செய்துள்ளனர். எங்கள் ஆட்சியில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு செய்து காட்டுவோம். முந்தைய அரசில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம். சிறந்த மருத்துவ சேவை வழங்குவதே அரசின் நோக்கம். மோடி, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரால் ஆந்திர மாநிலம் அனைத்து வழிகளிலும் வளர்ச்சி அடைவது உறுதி’ என்றார்.
ஜெகனின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்: ஆந்திர அமைச்சர் பேட்டி
70