சென்னை: காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டபடி விநாடிக்கு 5,000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறக்கவில்லை என்று குற்றசாட்டு வைத்துள்ளனர். விநாடிக்கு 5,000 கன அடி திறக்கவேண்டிய நிலையில் 2,784 கன அடி நீர் மட்டுமே கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் மொத்த நீர்மட்டமான 84 அடியில் 76 அடிக்கு நீர் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் மொத்த நீர்மட்டமான 124 அடியில் 97.74 அடிக்கு தண்ணீர் உள்ளது. தமிழகத்திலுள்ள மேட்டூர் அணையில் மொத்த நீர்மட்டமான 120 அடியில் 44 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது.