சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கலாஷேத்ரா மாணவிகள் தொடர்ந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.