மதுரை: போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினருக்கு போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். போதை தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு குஜராத், உ.பி., தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் வருகிறது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
138