கீவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு அனைத்து உரிமையும் உள்ளதாகவும் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். காசா முனை மீது இஸ்ரேல் படைகள் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நுழைவதற்கான வழியை இஸ்ரேல் அடைத்தது.