Saturday, July 27, 2024
Home » ரஷித் கான் சுழலில் மூழ்கியது அயர்லாந்து

ரஷித் கான் சுழலில் மூழ்கியது அயர்லாந்து

by Ranjith

ஷார்ஜா: அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 10 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 3.4 ஓவரில் 14 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. பின்னர் சுதாரித்து விளையாடிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது.

செதிக்குல்லா அடல் 35, முகமது நபி 59 ரன் (38 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரஷித் கான் 25 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 3, ஜோஷ் லிட்டில், மெக்கார்தி தலா 2, பென் ஒயிட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன் மட்டுமே எடுத்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தொடக்க வீரர்கள் பால்பிர்னி 45, கேப்டன் பால் ஸ்டர்லிங் 24 ரன் மற்றும் கேரத் டெலனி 39 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஆப்கான் பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவரில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். நங்கேயலியா கரோட்டே 2, முகமது நபி, பஸல்லாக் பரூக்கி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆல் ரவுண்டராக அசத்திய ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

You may also like

Leave a Comment

6 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi