டெல்லி: நடப்பாண்டில் இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் 5.03 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக ஒன்றிய விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகள் எண்ணிக்கை 42.85 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் 3.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.