சென்னையிலுள்ள ஐஐடியில் டெக்னிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Technical Officer: 8 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-2). தகுதி: ECE/IT/ Computer Science/Mechanical/Electrical & Electronics பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
2. Junior Technical Superintendent: 12 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 32க்குள். தகுதி: Biology/Life Science/Chemistry/Computer Science/IT/ECE/ E&I/EE/Mechanical ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பிடெக்., அல்லது எம்.எஸ்சி/எம்சிஏ.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.recruit.iitm.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2024.