ஹோண்டா நிறுவனம், கோல்டு விங் டூர் என்ற சூப்பர் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1,833 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 124.7 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.
பைக்கின் எடை 390 கிலோ. 7 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, நேவிகேஷன், புளூடூத் இணைப்பு வசதி, ஏர்பேக் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.39,88,995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.