யமஹா நிறுவனம் ஏராக்ஸ் 155 மோட்டோ ஜிபி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 155 சிசி புளூகோர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 14.79 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டருக்கான மோட்டோ ஜிபி எடிஷனை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ, கிரே வெர்மிலியன் மற்றும் சில்வர் நிறங்கள் உள்ளன. ஏற்கெனவே இந்த நிறுவனம் ஒய்இசட்எப் ஆர் 15 எம், எம்பி15 வி2.0 மற்றும் ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டர்களின் மோட்டோ ஜிபி எடிஷனை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.