டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் இயல்பை விட 100% அதிக மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 13 வரை இமாச்சல பிரதேசத்தில் பல
இடங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. பிலாஸ்பூர் 55.7, மண்டி 57.1, சோலன் 82.7, சிம்லா 49.8, ஹம்மீர்பூர் 48 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் விடாமல் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.