சென்னை: யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு சைபர் க்ரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. ரெட் பிக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் யூடியூபர் சங்கரை பேட்டி எடுத்து தனது சேனலில் வெளியிட்டார். அந்த பேட்டியில் யூடியூபர் சங்கர், பெண் காவலர்கள் குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார். தொடர்ந்து, கோவை சைபர் க்ரைம் போலீசார், யூடியூபர் சங்கர் மற்றும் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், யூடியூபர் சங்கருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி கணக்கில், கடந்த சில மாதங்களில் ரூ.1.25 கோடி பரிவர்த்தனை நடந்திருப்பதை சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்தனர். தற்போது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் சங்கர் வைத்திருக்கும் மற்ற 3 வங்கி கணக்குகளும் ஆராயப்பட்டு வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.