ஈரோடு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். செப்டம்பர் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் இன மக்கள் பற்றி தவறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குப்பதிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.